/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜவுளித்துறையில் என்ன படிப்பு? மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
ஜவுளித்துறையில் என்ன படிப்பு? மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஜவுளித்துறையில் என்ன படிப்பு? மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஜவுளித்துறையில் என்ன படிப்பு? மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜன 24, 2024 01:34 AM

கோவை;நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ஜவுளி பிரிவின் கீழ் என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளன;என்பது குறித்து, பள்ளி மாணவர்களுக்கு கோவை சர்தார் வல்லபாய் படேல் கல்லுாரியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கடந்த, 18 முதல் 23ம் தேதி வரை, பிளஸ்2 படிக்கும் பள்ளி மாணவர்கள் பல்கலை, கல்லுாரிகளுக்கு களப்பயணம் சென்றனர். அவிநாசி ரோட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் கல்லுாரியில், 590 மாணவர்கள் ஆய்வகங்கள், நுாலகங்கள், கண்காட்சி அரங்கம் அனைத்திற்கும் அழைத்து செல்லப்பட்டனர்.
டெக்ஸ்டைல் வகைகள், டெக்ஸ்டைல் துறையின் எதிர்கால வாய்ப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதையில் டெக்ஸ்டைல் மாற்றங்கள், தொழில்முனைவோர் வாய்ப்பு போன்ற பல்வேறு தகவல்களை கல்லுாரி இயக்குனர் அல்லிராணி விளக்கினார்.
நிறைவு நாளான நேற்றும், 120 பள்ளி மாணவர்கள் கல்லுாரியை பார்வையிட்டனர். இதில், கல்லுாரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

