/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில்துறை எதிர்பார்ப்பது என்ன? வேளாண் பல்கலையில் கருத்தரங்கு
/
தொழில்துறை எதிர்பார்ப்பது என்ன? வேளாண் பல்கலையில் கருத்தரங்கு
தொழில்துறை எதிர்பார்ப்பது என்ன? வேளாண் பல்கலையில் கருத்தரங்கு
தொழில்துறை எதிர்பார்ப்பது என்ன? வேளாண் பல்கலையில் கருத்தரங்கு
ADDED : ஆக 31, 2025 11:38 PM
கோவை; 'வேலை தேடுவோரிடம் தொழில்துறையினர் எதிர்பார்க்கும் திறனும், அவற்றைப் பூர்த்தி செய்யும் முறையும்' குறித்த ஒரு நாள் கருத்தரங்கு, கோவை வேளாண் பல்கலையில் நடந்தது.
பல்கலையின் உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் மற்றும் தாவர உயிரி தொழில்நுட்பத்துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் கோவை, மாலிக்யூலர் கனெக்சன்ஸ் நிறுவன, உதவி குழுத் தலைவர் சவுபர்னிகா லோகநாதன் பேசியதாவது:
தொழிலில் வெற்றி பெற, தொழில்நுட்ப அறிவு, மென்திறன் இரண்டும் அவசியம். குழு மனப்பான்மை, நேர்மறை சிந்தனை ஆகியவை, தொழில் வாழ்வை வெற்றிகரமாக கொண்டு செல்ல உதவும்.
நிறுவனம் சார் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், நவீன சந்தைப் போக்குகளைப் புரிந்து கொள்வது, தொழில்துறை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திறன்களை வளர்த்துக் கொள்வது, நிறுவன கலாசாரங்களுக்கு ஏற்ப மாறுவது, தொடர் கற்றல், உயர் பணிகளுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்வது போன்றவை, நீண்ட கால வெற்றிக்கு உதவும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
காக்ஸ்பிட் இயக்குனர் செந்தில், தாவர மூலக்கூறு மற்றும் உயிர் தகவலியல் துறை தலைவர் அருள், இணைப் பேராசிரியர் ஹேமபிரபா, உதவிப் பேராசிரியர் ராஜன்பாபு, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.