/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்களிடம் பிடித்த செய்த பி.எப். தொகை ரூ.60.48 லட்சம் என்னாச்சு? நடவடிக்கை எடுக்க கோரி மனு

ADDED : ஆக 25, 2025 09:21 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. சப் - - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்து, மனுக்களை பெற்றார்.
மனுக்கள் மீதான நடவடிக்கையை துரிதமாக செயல்படுத்த துறை ரீதியான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விவேகானந்தா சேவை மையத்தினர் அளித்த மனுவில், 'நெகமம் அருகே, என்.சந்திராபுரம் ஊராட்சிக்கு உட்பட்டு சாலைப்புதுார் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, பல்லடம் ரோட்டை ஒட்டி மாயாண்டி அப்புச்சி கோவில் உள்ளது. இந்நிலையில், கோவில் அருகே புதிதாக சர்ச் கட்டப்படவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
இங்கு, சர்ச் கட்டப்பட்டால் மக்கள் மத்தியில் பதட்டமும் குழப்பமும் நிலவும். கிராமத்தில் பிரச்னை ஏற்படும் என்பதால், அங்கு எந்தவொரு கட்டுமான பணியும் மேற்கொள்ள அனுமதி வழங்கக் கூடாது,' என, குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி நகராட்சியில் ஒப்பந்த துாய்மைப் பணியாளர்களாக, 168 பேர் பணிபுரிகின்றனர். அவ்வகையில், நகராட்சி வாயிலாக, தலா ஒரு பணியாளர்களுக்கு, மாதம், 1,500 ரூபாய் வீதம் பி.எப். தொகையை ஒப்பந்த நிறுவனத்துக்கு விடுவிக்கிறது.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய, 60.48 லட்சம் ரூபாயை, பணியாளர்களின் பி.எப். கணக்கில் செலுத்தப்படாமல் உள்ளது. ஒப்பந்த நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.