/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இப்படி ரோடு இருந்தால் எப்படி? வாகன ஓட்டுனர்கள் தடுமாற்றம்
/
இப்படி ரோடு இருந்தால் எப்படி? வாகன ஓட்டுனர்கள் தடுமாற்றம்
இப்படி ரோடு இருந்தால் எப்படி? வாகன ஓட்டுனர்கள் தடுமாற்றம்
இப்படி ரோடு இருந்தால் எப்படி? வாகன ஓட்டுனர்கள் தடுமாற்றம்
ADDED : டிச 03, 2025 07:25 AM

கோவை: சமீபத்தில் குறிச்சி பிரிவு சந்திப்பில், மாநில நெடுஞ்சாலைத்துறையால் ரவுண்டானா ஏற்படுத்தப்பட்டு, சாலை மேம்படுத்தப்பட்டது. ரோடு போட்டு சில மாதங்களே ஆகின்றன. ரவுண்டானாவில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கி வரும்போது திருப்பத்தில், ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே போட்ட ரோட்டில் குழி ஏற்பட்டதும், 'பேட்ச் ஒர்க்' செய்யப் பட்டிருக்கிறது. மழை பெய்த போது ரோடு பெயர்ந்து, பழைய ரோடு தெரியுமளவுக்கு, தரமின்றி ரோடு போடப்பட்டிருக்கிறது.
ரவுண்டானாவை சுற்றி, ஆத்துப்பாலத்தை நோக்கி வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த இடத்தில் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர்.
உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்பு குழு தலைவர் நீதிபதி அபய் மனோகர் சப்ரே தலைமையில் சமீபத்தில் கோவையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
சாலைகளில் ஏற்படும் குழிகளை சீரமைக்காமல், நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியமாக செயல்படுவது பட்டவர்த்தனமாக தெரியவந்தது.
அவரது அறிவுறுத்தல்களை செயல்படுத்த வேண்டும்; கோவையை தொடர்ந்து கண்காணிப்பேன் என அவர் எச்சரித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

