தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நீச்சல் குளம் கட்டும்போது கவனிக்க வேண்டியதென்ன?

நீச்சல் குளம் கட்டும்போது கவனிக்க வேண்டியதென்ன?

நீச்சல் குளம் கட்டும்போது கவனிக்க வேண்டியதென்ன?


ADDED : பிப் 17, 2024 02:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2024 02:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் கட்டும் வீட்டில், எப்படியெல்லாம் பாதுகாப்பான முறையில் நீச்சல் குளம் அமைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து, கோயமுத்தூர் மாவட்ட அனைத்து பொறியாளர்கள் சங்கம்( காட்சியா)இணை மக்கள் தொடர்பு அலுவலர் திருமூர்த்தி கூறியதாவது:

l வீடு கட்டும்போது, நீச்சல் குளம் அமைப்பதாக இருந்தால், நிலமட்டத்திலா அல்லது மொட்டைமாடியிலா என்பதை முடிவெடுக்க வேண்டும். அதற்கேற்ப திட்டமிடுதல் அவசியம்.

l நிலத்தில் அமைப்பதாக இருந்தால், நிலமட்டத்திலிருந்து சற்று உயரமாக அமைத்தல் அவசியம். அப்போதுதான் வெளிநீர் உட்புகாது. செவ்வக வடிவில் நீச்சல் குளம் அமைப்பது அதிக பயனைத்தரும்.

l ஆர்ச் நீச்சல்குளம் அமைத்தால், அழகாக இருக்கும். நீச்சல் குளம் கட்டும்போது ஆர். சி .சி., கான்கிரீட்டால் சுவர் மற்றும் தரை தளம் அமைப்பது அவசியம்.

l ஆர்.சி.சி.சுவர் அமைக்கும் போது, நீச்சல் குளத்தின் நீரின் கொள்ளளவை பொருத்து, சுவற்றின் கனத்தை அதிகரிக்க வேண்டும்.

l தரைதளம் அமைக்கும்போது, இறங்கும் இடம் ஆழம் குறைவாகவும், ஏறுமிடம் ஆழம் சற்று அதிகமாகவும் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கென்று நீச்சல் குளம் கட்டும்போது, ஆழம் குறைவாக அமைக்க வேண்டும்.

l சுவர் கட்டியபிறகு வாட்டர் ப்ரூபிங் செய்தபிறகே டைல்ஸ் ஒட்ட வேண்டும். தற்பொழுது டைல்ஸ்க்குப் பதிலாக, அதற்கென பிரத்யேக பி.வி.சி., ஷீட்டும் கிடைக்கிறது. அதை ஒட்டியும் பயன்படுத்தலாம்.

l பொதுவாக நீல நிறம் அல்லது பச்சை நிறம் உடைய டைல்ஸ் பயன்படுத்தவேண்டும். அதேபோல் நீச்சல்குளத்தைச் சுற்றி, நடைபாதை அமைக்கும்போது (டெக் ஏரியா) வழுக்காமல் இருக்கும் டைல்ஸ் கொண்டு ஒட்டவேண்டும். நடைபாதையை ஒட்டி புல்தரை அமைத்து அழகுபடுத்தலாம்.

l வீட்டின் மேற்பரப்பில் அமைப்பதாக இருந்தால், வீடு கட்ட ஆரம்பிக்கும்போதே, தகுந்த பொறியாளரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

l நீச்சல் குளம் அமைத்தபிறகு, பராமரிப்பு மிக மிக அவசியம். தற்போது பராமரிப்பு சாதனங்கள் மற்றும் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வேதிப்பொருட்கள், மார்க்கெட்டில் எளிதில் கிடைக்கின்றன.

l பில்ட்ரேசன் யூனிட் அமைத்து, தினமும் நீரை சுத்தப்படுத்துதல் அவசியம். குழந்தைகள் நீச்சல் பழகும்போது நமது கண்காணிப்பு முக்கியம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us