/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
/
வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
ADDED : அக் 04, 2024 11:35 PM

தோல்விகளைத் தாண்டி தான் வெற்றி சாத்தியம்; ஆனால், வெற்றி கிட்டுவதில்லையே என்ற சோர்வு பல மாணவர்களுக்கும் இருப்பது உண்மைதான். சில சமயங்களில் எதேச்சையாக, அதிர்ஷ்டவசமாக, சில விஷயங்கள் யாருக்கா-வது சாதகமாக நிகழ்ந்துவிடலாம். ஆனால், எல்லா மாணவர்களுக்கு இதற்காகவே காத்திருக்க முடியாது. அதிர்ஷ்டத்தை நம்பி வாழும்போது, பயத்திலும் பதற்றத்தி-லும் வாழ்கிறோம். தெளிவான நோக்கத்துடனும் திறமையுடனும் வாழும்போது நடந்தாலும் நடக்காவிட்டாலும், நடப்பவை மேல் ஓர் ஆளுமை இருக்கும்.
உறுதியோடு இருக்கும் ஒரு மனிதனுக்குத் தோல்வி என்பதே கிடையாது. மனம் ஒரே திசையில் நிலைத்துவிடும். சிந்திக்கும் விதமாகத்தான் வாழ்க்கையை உணரும் விதமும் இருக்கும். எண்ணமும் உணர்வுகளும் ஒன்று சேர்ந்தால், சக்தியும், உட-லும்கூட அத்திசையில் ஒருங்கிணைந்துவிடும். ஒருமுகமாகின்ற போது, கனவு நிஜ-மாகும்.
நம் வாழ்க்கையில் பலவிதமான சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு, வெவ்வேறு விதமான ஆளுமை குணங்கள் தேவை. வளைந்துகொடுக்கும் தன்மையுடன் இருந்-தால், எடுத்திருக்கும் பாத்திரத்தில் முழு திறனுடன் செயல்பட முடியும். சிறிதும் சிக்கலிருக்காது. பலர், சூழ்நிலைக்கேற்றவாறு வளைந்து கொடுக்க முடியாமல் கட்-டுண்டு கிடக்கிறார்கள். நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதன்மேல் உள்ள கவனத்-தைத் தாண்டி உங்கள் குறிக்கோளையும், நீங்கள் இயங்கும் வளையத்தையும் விரி-வுபடுத்திவிட்டால், எப்படியும் நீங்கள் உயர்ந்த மனிதராகத்தான் இருப்பீர்கள்.
திறமையின் உச்சத்தில் செயல்பட்டால், ஏதோ ஒருவிதத்தில் நீங்கள் உயர்ந்தவரா-கத்தான் இருப்பீர்கள். திறமைகள் இயல்பாக அதிகரிக்கத் துவங்கிவிடும்போது, செய்-வதற்கு ஏராளமான செயல்கள் இருக்கும்.
வாழ்க்கையில் புதிய விஷயங்களை ஆர்வமுடன் தேடும் நபராக இருங்கள். தெரிந்த விஷயமே போதும் என்ற மனப்பான்மையை மாற்றி புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். 'கற்றது கை மண் அளவு கல்-லாதது உலகளவு' என்பார்கள். உங்கள் அன்றாட வாழ்க்கையில் புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பார்கள். அன்றாட வாழ்க்கையில் தினமும் ஒரு மணி நேரமாவது உங்கள் உடலுக்கென ஒதுக்கி உடற்பயிற்சி, நடைப்-பயிற்சி போன்று உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய செயலில் ஈடுபடுதல் அவசி-யம். உடலை சீராய் வைப்பதோடு மட்டுமல்லாமல் மனதையும் புத்துணர்ச்சியாய் வைக்க உதவும்.
உலகில் தலை சிறந்த தலைவர்கள் அத்தனை பேரும், புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். புத்தக வாசிப்பிற்கு அப்படி ஒரு 'பவர்' என்றே கூற-லாம். ஒவ்வொரு புத்தாகவாசிப்பின் முடிவிலும் வாழ்க்கையில் முன்னேறுவதற்-கான ஒரு ஊன்று கோல் நிச்சயம் நமக்கு கிடைக்கும். அன்றாட வாழ்க்கையில் புத்தக வாசிப்புக்கென நேரத்தை ஒதுக்குங்கள். அதுவே உங்களை வெற்றி பாதைக்கு அழைத்துச்செல்லும்.
மனதிற்கும், மூளைக்கும் ஓய்வும் புத்துணர்ச்சியும் மிகவும் அவசியம். ஒரு பய-னுள்ள பொழுதுபோக்கில் அன்றாடம் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். இதன் வாயிலாக புத்-துணர்ச்சி கிடைக்கும்.