/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2030ல், 'நம்ம கோவை' எப்படி இருக்கும்! துாரிகையால் ஆரூடம் கூறிய இளம் ஓவியர்கள்

ADDED : நவ 09, 2024 11:41 PM

'கோவை விழா'வை முன்னிட்டு, இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், மாணவர்களின் ஓவிய ஆற்றலை வெளிக்கொண்டு வரும் விதமாக, '2030ல் கோயம்புத்துார்' என்ற தலைப்பில் ஓவியப்போட்டி, பீளமேடு சுகுணா கல்யாண மண்டபத்தில் நேற்று நடந்தது.
இந்த போட்டியில், கோவையில் உள்ள, 133 அரசு பள்ளிகளை சேர்ந்த, 400 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, ரொக்கப் பரிசாக மொத்தம், 22 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும், மாணவர்கள் வரைந்த ஓவியங்கள், வரும், 30ம் தேதி முதல் டிச., 1 வரை ரேஸ் கோர்ஸ் ஸ்கீம் ரோட்டில் நடக்கும் ஓவியச் சந்தை தனி அரங்கில் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
கோவை விழா ஓவிய சந்தை ஒருங்கிணைப்பாளர் சுருதி கூறியதாவது:ஏற்கனவே பள்ளிகளில் ஒவியப்போட்டி நடத்தி, அதில் வெற்றி பெற்ற மாணவர்கள் இந்த இறுதி சுற்றுப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஐந்து பரிசுகள் வழங்கப்படுகின்றன.
பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், 800 ரூபாய் மதிப்புள்ள கேன்வாஸ், பெயின்ட், பிரஷ் உள்ளிட்ட பொருட்களின் தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. ஓவிய சந்தையில், பல மாநிலங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட ஓவியர்கள் தங்களின் படைப்புகளை காட்சிக்கு வைக்கின்றனர். அதில் மாணவர்களின் படைப்புகளும் இடம்பெறும்.
இவ்வாறு, அவர் கூறினார்.