/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சன்ஷேடுகளின் வெளிப்புறத்தில் வரும் வெடிப்புக்கு என்ன தீர்வு?
/
சன்ஷேடுகளின் வெளிப்புறத்தில் வரும் வெடிப்புக்கு என்ன தீர்வு?
சன்ஷேடுகளின் வெளிப்புறத்தில் வரும் வெடிப்புக்கு என்ன தீர்வு?
சன்ஷேடுகளின் வெளிப்புறத்தில் வரும் வெடிப்புக்கு என்ன தீர்வு?
ADDED : ஜன 20, 2024 02:19 AM

கட்டட கட்டுமான பணிமேற்கொள்ளும் வாசகர்களின்சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார். கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் (காட்சியா) துணை தலைவர் விஜயகுமார்.
நாங்கள் கட்டி வரும் வீட்டை சுற்றியுள்ள பகுதி, களிமண்ணாக உள்ளது. எனவே, சுவர்களில் ஓதம் அடிக்காமல் இருக்க எவ்வாறு கட்டடத்தை அமைக்க வேண்டும்?--
-வீரக்குமார் பூச்சியூர்.
பொதுவாக கட்டடம் கட்டும்போது, அடித்தளத்தில் உள்ள சுவர்களின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை, உட்புறம் அமைந்துள்ள பீம் வரை முழுமையாக பூச வேண்டும் மற்றும் தரைப்பகுதியில் 'டேம்ப் புரூப் கோர்ஸ்' அமைத்து, வீட்டின் வெளிப்புறத்தை சுற்றி பிளாக்கிங் கான்கிரீட் அமைப்பது மிகச்சிறந்தது.
ப்ளோரிங் கான்கிரீட் போடும் போது ஜல்லியை பரப்பி அதன் மேல் சிமென்ட் கலவையை அமைக்கிறார்கள். இந்த முறை சரியானதா?
-பிரபு, தொண்டாமுத்துார்.
ப்ளோரிங் கான்கிரீட் போடும்போது சரியான விகிதத்தில் மணல், ஜல்லி மற்றும் சிமென்ட்டை கான்கிரீட் இயந்திரத்தில் கலக்கி, சரியான உயரத்தில் 3 முதல் -4 இன்ச் அளவில்மட்டுமே அமைக்க வேண்டும்.
நாங்கள் குடியிருக்கும் வீடு ஐந்து வருடம் ஆண்டுகள் கழிந்து விட்டது. தற்போது சன்ஷேடுகளின் வெளிப்புறத்தில் வெடிப்பு ஏற்படுகிறது. அதற்கு சரியான தீர்வு தாருங்கள்.
-சதீஷ்குமார், வீரகேரளம்.
சன்ஷேடு கான்கிரீட் அமைக்கும் போது, கண்டிப்பாக கவர் பிளாக் வைத்து சரியான தரத்தில் கான்கிரீட் அமைக்க வேண்டும். பின், சிமென்ட் கலவையால், சன்ஷேடு மற்றும் சுவர் இணைப்பில் குழவு வைத்து மேற்பரப்பை வாட்டமாக பூச வேண்டும்.
தண்ணீர் தொட்டி கட்டும் போது, நீர் கசிவு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
-பன்னீர்செல்வம்,
போத்தனுார்.
தண்ணீர் தொட்டிகளை கான்கிரீட் சுவராககட்டுவது மிகச்சிறந்தது, தொட்டியின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் கண்டிப்பாக சிமென்ட் கலவையால் பூச வேண்டும். சுவர் மற்றும் ஸ்லாப் இணைப்பில் இடைவெளி இல்லாமல் இருக்க வேண்டும்.
வீட்டின் கழிவறைகளில் சிறுசிறு பூச்சிகள் அடிக்கடி வருகின்றன. அதை எவ்வாறு தடுப்பது?
-மணிமாறன்,
குறிச்சி.
வீட்டில் கழிவுநீர் வாய்க்கால் உள்ளதா அல்லது சோக் பிட் அமைத்துள்ளீர்களா என தெரியவில்லை. எதுவாகினும் உங்களது கழிவுநீர் குழாயை, வீட்டிற்கு வெளியே கொண்டு செல்லும் முன் ஒரு 'எஸ் ட்ராப்' அமைக்க வேண்டும் அதில், எப்பொழுதும் தண்ணீர் நிரம்பி இருக்கும் என்பதால் வெளியில் இருந்து பூச்சிகள் வருவவதற்கு வாய்ப்பு இல்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.