/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்தியா, அமெரிக்கா இடையே வீல்சேர் கூடைப்பந்து பயிற்சி
/
இந்தியா, அமெரிக்கா இடையே வீல்சேர் கூடைப்பந்து பயிற்சி
இந்தியா, அமெரிக்கா இடையே வீல்சேர் கூடைப்பந்து பயிற்சி
இந்தியா, அமெரிக்கா இடையே வீல்சேர் கூடைப்பந்து பயிற்சி
ADDED : ஜூலை 30, 2025 09:01 PM

கோவை; இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் வீல்சேர் கூடைப்பந்து வீரர்கள் கே.சி.டி., கல்வி நிறுவனத்தில் நேற்று முதல் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே விளையாட்டு, கலாசார புரிதலை ஏற்படுத்தும் விதமாக, இரு நாடுகளின் வீல்சேர் கூடைப்பந்து வீரர்களிடையேயான பயிற்சி முகாம், குமரகுரு கல்வி நிறுவனங்களில் நேற்று துவங்கியது.
ஆக., 10ம் தேதி வரை விளையாட்டு திறன்களை மேம்படுத்துதல், கலாசார உறவுகளை உருவாக்குவது போன்றவற்றை நோக்கமாக கொண்டு, இப்பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதில், அமெரிக்க பல்கலைகளை சேர்ந்த, 15 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த, 15 வீரர்களும் இப்பயிற்சியில் களம் இறங்கியுள்ளனர்.
இரு நாட்டு வீரர்களிடையேயான பயற்சி, பார்வையாளர்களிடம் கரகோஷங்களை எழுப்பி வருகிறது.
தமிழ்நாடு வீல்சேர் கூடைப்பந்து சங்கபொதுச்செயலாளர் குணசேகரன் பேசுகையில், ''இரு நாடுகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகள், சமூகத்தில் குறிப்பிட்ட சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்த முயற்சி, சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் அளவுகோலாக இருக்கும்,'' என்றார்.
குமரகுரு 'குளோபல் எங்கேஜ்மென்ட்' அலுவலக இயக்குனர் விஜிலா, எட்வின் கென்னடி உள்ளிட்டோர், துவக்க விழாவில் பங்கேற்றனர்.