/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை மூட்டைகளால் துர்நாற்றம் அகற்ற நல்ல நாள் எப்போ வருமோ?
/
குப்பை மூட்டைகளால் துர்நாற்றம் அகற்ற நல்ல நாள் எப்போ வருமோ?
குப்பை மூட்டைகளால் துர்நாற்றம் அகற்ற நல்ல நாள் எப்போ வருமோ?
குப்பை மூட்டைகளால் துர்நாற்றம் அகற்ற நல்ல நாள் எப்போ வருமோ?
ADDED : ஜன 25, 2024 06:40 AM

கோவை, : கோவை மண்டல பி.எப்., அலுவலகத்தில், ஒரு மாதத்துக்கு மேலாக குப்பை அகற்றப்படாமல் மூட்டைகளாக கட்டி வைத்து இருப்பதால், துர்நாற்றம் வீசுகிறது.
கோவை பாலசுந்தரம் ரோட்டில் மண்டல பி.எப்., அலுவலகம் செயல் படுகிறது. இங்கு தினமும் 200க்கும் மேற்பட்ட பி.எப்., சந்தாதாரர்கள், பல்வேறு பணிகள் காரணமாக வந்து செல்கின்றனர்.
அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகில், மூட்டை மூட்டையாக குப்பை கட்டி வைக்கப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் டோக்கன் பெறும் இடத்தில், குப்பை மூட்டைகள் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. சந்தாதாரர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர்.
அலுவலக பணியாளர்கள் கூறுகையில், 'வாரம் ஒருமுறை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பை எடுக்க வருவது வழக்கம். ஆனால் கடந்த 45 நாட்களுக்கு மேலாக யாரும் குப்பை எடுக்க வரவில்லை. புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அலுவலகத்துக்கு வெளியில் இருந்த குப்பை தொட்டியையும் அகற்றி விட்டனர். இப்போது குப்பை போட தொட்டி இல்லை. வேறு வழியின்றி மூட்டையாக கட்டி வைத்து இருக்கிறோம்' என்றனர்.