/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட்: விண்ணப்பிக்க எப்போ கடைசி தேதி?
/
பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட்: விண்ணப்பிக்க எப்போ கடைசி தேதி?
பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட்: விண்ணப்பிக்க எப்போ கடைசி தேதி?
பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட்: விண்ணப்பிக்க எப்போ கடைசி தேதி?
ADDED : ஜன 29, 2024 12:31 AM
கோவை:மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டி பிப்., மாதம் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள், வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, பிப்ரவரியில் துவங்குகிறது.
இந்தாண்டு, 12 வயதுக்கு உட்பட்டோருக்கு 'ஏ.வி., லட்சுமணன் செட்டியார் நினைவு கோப்பை', 14 வயதுக்கு உட்பட்டோருக்கு 'ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் மெட்ரோபாலிஸ் கோப்பை' மற்றும் 16 வயதுக்கு உட்பட்டோருக்கு 'டி.எஸ்.எஸ்., அண்ட் கோப்பை' என மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது.
பங்கேற்க விரும்பும் பள்ளிகள், மாணவர்களின் பிறப்பு சான்றிதழுடன், முதல்வர் அல்லது தலைமையாசிரியரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை, கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 80729 48889 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.