/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு எப்போது?
/
மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு எப்போது?
மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு எப்போது?
மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு எப்போது?
ADDED : மே 26, 2025 11:52 PM
கோவை : கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த ஆண்டு நடத்தப்படாத நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான இடமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் தற்போது 81 ஆரம்பப்பள்ளிகள், 48 நடுநிலைப்பள்ளிகள், 10 உயர்நிலைப்பள்ளிகள், 16 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஒரு சிறப்புப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள, ஆசிரியர் பணியிடங்களில் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டால், மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில், தேவையான பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக நிரப்பப்படுகின்றன.
இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த ஆண்டு நடைபெற்றது.
ஆனால், மாநகராட்சிப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை; இந்த ஆண்டும், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என, ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மாநகராட்சி கல்வி அதிகாரி கூறுகையில், 'இடமாறுதல் கலந்தாய்வை நடத்துவதற்கான அரசு ஆணை இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், ஜூன் இறுதிக்குள், ஆசிரியர் பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளது' என்றார்.
மாநகராட்சிப்பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை, அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் நடத்துகின்றனர். அதுபோல, மாநகராட்சி பள்ளிகளுக்கு துறைத் தலைவராக செயல்படும் ஆணையருக்கு, அந்த ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை நடத்தும் அதிகாரம் உண்டு' என்றனர்.