/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய பொருட்களை அகற்றுவது எப்போது?
/
பழைய பொருட்களை அகற்றுவது எப்போது?
ADDED : ஜன 19, 2026 06:39 AM

நெகமம்: நெகமம், செங்குட்டைபாளையத்தில் ரோட்டின் வளைவு பகுதியில் கிடக்கும் பழைய பொருட்களை அகற்ற வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நெகமம், செங்குட்டைபாளையத்தில் அரசு பள்ளி முன் ரோட்டின் ஓரத்தில், பழைய மின்கம்பங்கள், கவிழ்ந்த நிலையில் பழைய கான்கிரீட் தொட்டி, சேதமடைந்த நிலையில் சோலார் பேனல் உள்ளிட்ட பொருட்கள் குப்பையாக கிடக்கிறது.
இதைச் சுற்றிலும் புதர் மண்டி காணப்படுகிறது. இங்கு செடி, கொடிகள் அகற்றப்படாததால், பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்கள் அதிகம் உள்ளன.
மேலும், அரசு பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளிட்டவைகள் அருகில் இருப்பதால், மாணவர்கள் மற்றும் மக்கள் நலன் கருதி ரோட்டோரம் கிடக்கும் பொருட்களை அகற்றி இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
இதே போன்று, பள்ளி அருகே ரோட்டின் வளைவில் தாழ்வான பகுதியில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இரவு நேரத்தில் பைக்கில் வருவோர் கால்வாய் இருப்பது தெரியாமல் விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, ரோட்டின் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

