தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தாலுகா அலுவலக கட்டுமான பணிகள் எப்போது துவங்கும்

 தாலுகா அலுவலக கட்டுமான பணிகள் எப்போது துவங்கும்

 தாலுகா அலுவலக கட்டுமான பணிகள் எப்போது துவங்கும்


ADDED : பிப் 09, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 06:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தாலுகா அலுவலக கட்டடம் விரைவில் திறக்க வேண்டும் என, விவசாய சங்கத்தினர் வலியுறுத்தினர்.

கிணத்துக்கடவு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் சென்னை தலைமை செயலகத்தில், மனு அளிக்கப்பட்டது. அதில், கூறியிருப்பதாவது:

கிணத்துக்கடவு கரிய காளியம்மன் கோவில் நிலத்தில், கடந்த 2013ம் ஆண்டு தாலுகா அலுவலக கட்டடம் கட்டும் பணி துவங்கியது. வருவாய் துறைக்கு கட்டடம் கட்ட, பொதுப்பணித்துறைக்கு மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கினார். 80 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்திருந்தது.

இந்நிலையில், கோவில் தர்மகத்தாக்கள், மாவட்ட கலெக்டர் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கோவில் நிலத்திற்கு, 67 லட்சத்து, 55 ஆயிரத்து, 96 ரூபாய் தொகைக்கு வருவாய்த் துறைக்கு விற்பனை செய்ய, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு, 2019 மார்ச் மாதம் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு கடந்த ஆண்டு 2025 ஜூன் மாதத்தில் முடிந்தது.

வழக்கு முடிந்து, ஏழு மாதங்கள் ஆகியும் தற்போது வரை கட்டடத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்குள்ள பெரும்பாலான பொருட்கள் திருட்டு போய்விட்டன.

தற்போது உள்ள தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் அமர போதியஅளவு இடவசதிகள் இல்லை. எனவே, விரைவில் தாலுகா அலுவலக கட்டட பணிகளை துவங்கி, நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us