/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை விழா எப்ப நடக்கும்? சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
/
கோடை விழா எப்ப நடக்கும்? சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
கோடை விழா எப்ப நடக்கும்? சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
கோடை விழா எப்ப நடக்கும்? சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 07, 2025 08:44 PM
வால்பாறை,; மே மாதம் துவக்கத்தில் கோடை விழா நடத்த வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை வரும் சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில், ஆண்டு தோறும் சுற்றலாத்துறை சார்பில் மே மாதம் கோடை விழா நடத்தப்படுகிறது. ஊட்டி, கோத்தகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கோடை விழா நடைபெறும் தேதி முன் கூட்டியே அறிவிக்கப்பட்டு விழா நடத்தப்படுகிறது.
ஆனால் வால்பாறையில் கோடை விழா தாமதமாக மே மாத இறுதியில் தான் நடைபெறுகிறது. இதனால், சுற்றுலா பயணியர் அதிருப்தியடைந்துள்ளனர்.
இது குறித்து, சுற்றுலா பயணியரும், உள்ளூர் மக்களும் கூறியதாவது: வால்பாறையில் தமிழக அரசின் சார்பில், ஆண்டு தோறும் மே மாதம் கோடைவிழா நடத்தப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு கோடை விழா நடத்தவில்லை. இதனால் ஏமாற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு வால்பாறையில் கோடை விழா நடத்த, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மே மாத இறுதியில் கோடை விழா நடத்துவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. மாத இறுதியில் கோடை விழா நடத்தப்படுவதால் சுற்றுலா பயணியர் வருகையும் வெகுவாக குறைந்து விடும். எனவே வால்பாறையில் மே மாதம் துவக்கத்தில் கோடை விழா நடத்த வேண்டும்,' என்றனர்.
நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளியிடம் கேட்ட போது, 'கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் காரணமாக, கோடை விழா நடத்தவில்லை. இந்த ஆண்டு மே மாதம் திட்டமிட்டபடி கோடை விழா நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் மேற்க்கொள்ளும்,' என்றனர்.
தகவல் மையம்
கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து வருகிறது. ஆனால், சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள் குறித்து, வால்பாறையில் எந்த அறிவிப்பும் இல்லை.
இதனால், வெளிமாநிலங்களில் இருந்து வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சுற்றுலாத்துறை சார்பில் வால்பாறை நகரில் கோடை விழாவுக்கு முன்னதாக சுற்றுலா தகவல் மையம் அமைக்க வேண்டும்.