ADDED : அக் 03, 2025 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கவுண்டம்பாளையம், கிரிநகர் பகுதியை சேர்ந்த, 22 வயது பெண், பி.இ., படித்து விட்டு வீட்டில் இருந்தார். தோழியருடன் சினிமாவுக்கு செல்வதாக கூறிச் சென்றவர், இரவு வரை வீடு திரும்பவில்லை. கவுண்டம்பாளையம் போலீசார் தேடுகின்றனர்.
* தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த, 18 வயதான மாணவிக்கும், அதே பகுதியில் வசிக்கும் வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோர் கண்டித்தனர். வீட்டுக்குத் தெரியாமல், துணிகள், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாயமானார். செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.