/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைக்கால பூச்சிகள் எங்கிருந்து வருகின்றன? வேளாண் பல்கலை பூச்சியியல் துறை தலைவர் விளக்கம்
/
மழைக்கால பூச்சிகள் எங்கிருந்து வருகின்றன? வேளாண் பல்கலை பூச்சியியல் துறை தலைவர் விளக்கம்
மழைக்கால பூச்சிகள் எங்கிருந்து வருகின்றன? வேளாண் பல்கலை பூச்சியியல் துறை தலைவர் விளக்கம்
மழைக்கால பூச்சிகள் எங்கிருந்து வருகின்றன? வேளாண் பல்கலை பூச்சியியல் துறை தலைவர் விளக்கம்
ADDED : ஜூன் 14, 2025 11:41 PM

கோவை: மழைக்காலம் தொடங்கிவிட்டாலே, மாலை நேரங்களில் பல நூற்றுக்கணக்கான இறகு முளைத்த பூச்சிகளின் தொல்லை அதிகரித்து விடும். அதிலும் இறகு முளைத்த எறும்புகள், ஈசல்கள் அதிக எண்ணிக்கையில் பறந்து வந்து, வீடுகளுக்குள் புகுந்து விடும்.
இவை ஏன் மழைக்காலத்தில் வருகின்றன.இவற்றின் இடையூறைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து, வேளாண் பல்கலை பூச்சியியல் துறை தலைவர் முருகனிடம் கேட்டோம்.
அவர் கூறிய சுவையான தகவல்கள் இதோ உங்களுக்கும்!
n மழைக்காலம்தான் சில வகை பூச்சிகளுக்கு இனப்பெருக்க காலம். கூட்டுப்புழு பருவத்தில் இருந்து விடுபட்டு, இயல்பான பருவத்துக்கு வந்திருக்கும். மழை பெய்ததும், இணக்கமான காலம் என்பதை அறிந்து இனப்பெருக்கத்துக்காகவும், உணவு, தாவரங்களை நோக்கியும் நகரத் தொடங்கும்.
n வண்டு, அந்துப் பூச்சி, தத்துப்பூச்சி போன்றவை விளக்குகளால் அதிகம் ஈர்க்கப்படும் இனங்கள். அதிக ஒளி எங்கிருந்து வருகிறதோ அங்கு நோக்கி, இந்த மழைக்கால பூச்சிகள் படையெடுக்கும். ஜூன், ஜூலை, செப்., அக்., காலம் இவற்றுக்கு உகந்தவை.
n பெரும்பாலும் மாலை 6:00 முதல் 8:00 மணி வரை ஒளியை நோக்கி அதிகம் படையெடுக்கும்.
n ஈசல்கள் என்பவை இறகு முளைத்த கரையான்கள். அவை வெளியே வந்ததும் இனப்பெருக்கத்துக்கான உறவில் ஈடுபடும். அவற்றின் இறகுகள் விரைவில் உதிர்ந்து விடும். அவை தரையில் ஊர்ந்து, பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயரும். சில வகை இறகு முளைத்த எறும்புகளும் இப்படித்தான்.
n ஈசல், எறும்பு போன்றவை கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. மண்ணுக்கு அடியில் பல அடுக்குகளில் குடியிருப்பை உருவாக்கி வசிக்கும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.