/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளையாட்டு நிதி எங்கே? பா.ஜ., நிர்வாகி கேள்வி
/
விளையாட்டு நிதி எங்கே? பா.ஜ., நிர்வாகி கேள்வி
ADDED : அக் 07, 2025 12:41 AM

பொள்ளாச்சி, அக். 7-
பா.ஜ., மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் பாலாஜி, பொள்ளாச்சியில் நடந்த கட்சி பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றார். முன்னதாக, அவரை, மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலாளர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் வரவேற்றார்.
அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மாநில அரசு, விளையாட்டு போட்டி என்ற பெயரில் முதல்வரை மையப்படுத்தியே நடத்தப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறைநடத்தும் போட்டிகளும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் முதல்வர் கோப்பைக்கான போட்டிகளும், ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் மாணவர்கள் குழப்பம் அடைகின்றனர்.
விளையாட்டு போட்டி நடத்துவதில் மாநில அரசு சிறப்பாக செயல்படுவதில்லை. விளையாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்துவதும் கிடையாது. தமிழகத்தில் விளையாட்டு போட்டிக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 'அம்மா யூத் ஸ்போர்ட்ஸ்' திட்டம் கொண்டுவரப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் எந்தவொரு திட்டமும் கொண்டுவரப்படவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.