/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்து பைசா லேத் எங்கே... முன்னாள் மாணவர் சந்திப்பில் சுவாரஸ்யம்
/
பத்து பைசா லேத் எங்கே... முன்னாள் மாணவர் சந்திப்பில் சுவாரஸ்யம்
பத்து பைசா லேத் எங்கே... முன்னாள் மாணவர் சந்திப்பில் சுவாரஸ்யம்
பத்து பைசா லேத் எங்கே... முன்னாள் மாணவர் சந்திப்பில் சுவாரஸ்யம்
ADDED : செப் 05, 2025 10:02 PM

கோவை:
கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில், 1975ல் படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. 50 ஆண்டுகளுக்கு முன் படித்த இம்மாணவர்கள் சந்திப்பு முதிர்ந்ததாகவே இருந்தது.
உலகம் முழுவதும் பி.எஸ்.ஜி., மாணவர்கள் பல்வேறு உயர்ந்த பதவிகளில் இருப்பதும், கோவையில் பல தொழிற்சாலைகளை உருவாக்கி உள்ளதையும் பெருமையான தருணமாக நினைவு கூர்ந்தனர். அவர்கள் பேசியதெல்லாம் இளமையாக இருந்தன. பேச்சுக்கள் எல்லாம் குழந்தைத்தனமாகவும் மாறி இருந்தது.
முன்னாள் மாணவர்களில் ஒருவர் நினைவு கூர்ந்தததில், சுவாரஸ்மானது. அது:
அந்தக் காலத்தில் ராகிங் உண்டு. முதலாம் ஆண்டு மாணவர்களை அடையாளப்படுத்த மொட்டை போட வைப்பது வழக்கம். ஒரு சீனியர் மாணவர், ஜூனியர் மாணவரை அழைத்து, பத்து பைசா கொடுத்து, 'லேத் வாங்கி வா... நாளை இதே இடத்தில் சந்திக்கிறேன்' எனக் கூறி விட்டுச் சென்றுவிட்டார்.
லேத் என்றாலே என்னவென்று அறியாத அந்தக் காலத்தில், வேறொரு மாணவரிடம் கேட்க, அவரோ, 'எதிரே உள்ள பெட்டிக்கடையில் இருக்கிறது; போய் வாங்கி வாருங்கள்' எனக் கூறி விட்டாராம். கடைக்காரரிடம் கேட்டபோது, 'இன்று எல்லாம் தீர்ந்து விட்டது; நாளை வாருங்கள்' என்று சொல்லி, அனுப்பி விட்டாராம்.
இரவு விடுதியில் சக மாணவர்களை சந்தித்தபோது, 'லேத் என்றால் என்ன என்று யோசித்தபோது, நுாலகத்துக்குச் சென்று புத்தகங்களை தேடி கண்டுபிடித்தனர்.
இயந்திரங்களை செய்யும் இயந்திரம் என அறிந்தபோது, ஜூனியர் மாணவருக்கு பயம் வந்து விட்டது. மறுநாள் அதே இடத்தில் சீனியர் மாணவரை சந்தித்தபோது, இந்த விளக்கத்தை அம்மாணவர் தெரிவித்தார். அதற்கு, '10 பைசாவுக்கு லேத் கிடைக்காது. அதை நீயே வைத்துக்கொள். ஆனால், லேத் என்றால் என்ன என்பது உனக்கு வாழ்நாளில் மறக்காது' என்றாராம்.
இவ்வாறு, பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார் அவர்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் சங்க பொதுச் செயலாளர் அரசு வரவேற்றார்.
தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வைத்தார். ராமச்சந்திரலு, பிரகாசன் உள்ளிட்டோர் பழமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர் சண்முகசுந்தரம் நன்றி தெரிவித்தார்.