sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டி:வெற்றி பெற்ற அணிகள் எவை

/

மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டி:வெற்றி பெற்ற அணிகள் எவை

மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டி:வெற்றி பெற்ற அணிகள் எவை

மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டி:வெற்றி பெற்ற அணிகள் எவை


ADDED : ஜன 31, 2024 12:19 AM

Google News

ADDED : ஜன 31, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;மாவட்ட அளவிலான இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், தீன தயாளராஜாவின் சிறப்பான பேட்டிங் கைகொடுக்க, சக்தி கல்லுாரி அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின், மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டிகள் பல்வேறு மைதானங்களில் நடந்தன.

* சக்தி கல்லுாரியில் நடந்த, 'யூனிவர்சல் ஹீட் எக்ஸ்சேஞ்ச்' கோப்பைக்கான இரண்டாம் டிவிஷன் லீக் போட்டியில், ரெட் டைமண்ட்ஸ் அணி (46.2 ஓவர்களில் 118/10. நிவாஸ் அலி கான் 35 ரன்; சக்தி கல்லுாரி செஜின் நான்கு விக்கெட்) சக்தி கல்லுாரி அணியிடம் (28.5 ஓவர்களில் 119/4. தீன தயாளராஜா 64 ரன்; ரெட் டைமண்ட்ஸ் அணியின் சம்ரித் மூன்று விக்கெட்) வீழ்ந்தது.

* சி.ஐ.டி., கல்லுாரியில் நடந்த என் தாமோதரன் வெல்பேர் கோப்பைக்கான போட்டியில், ரெயின்போ கே.எம்.பி., அணி (38.3 ஓவர்களில் 173/10. பிரித்விராஜ் 51* ரன், முகேஷ் 36ரன்; ஜாலி ரோவர்ஸ் அணியின் திருமுருகன் 4 விக்கெட்) ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (44 ஓவர்களில் 174/4. காட்வின் ரூபேஷ் 76* ரன், பிரியதர்சன் 64* ரன்) அணியிடம் தோல்வியடைந்தது.

* பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்த 'எல்ஜி எக்யூப்மென்ட்ஸ்' கோப்பைக்கான நான்காம் டிவிஷன் போட்டியில், சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணி, (49.2 ஓவர்களில் 183/10. விக்னேஸ்வர் 78 ரன், செந்தில் குமார் 32 ரன்; கோயம்புத்துார் பிரண்ட்ஸ் அணியின் தனசேகர் 4 விக்கெட், சபரி குமார் 3 விக்கெட்) கோயம்புத்துார் பிரண்ட்ஸ் எப்.சி., (48.3 ஓவர்களில் 184/5. கார்த்திக் குமார் 55* ரன், ரிதீஸ்வர் 33 ரன், உபேந்திரா 34* ரன்) அணியிடம் தோல்வியடைந்தது.






      Dinamalar
      Follow us