/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்த வாழை இலைக்கு எந்த சத்து பற்றாக்குறை? 'க்விஸ்' நடத்தி விழிப்புணர்வு
/
இந்த வாழை இலைக்கு எந்த சத்து பற்றாக்குறை? 'க்விஸ்' நடத்தி விழிப்புணர்வு
இந்த வாழை இலைக்கு எந்த சத்து பற்றாக்குறை? 'க்விஸ்' நடத்தி விழிப்புணர்வு
இந்த வாழை இலைக்கு எந்த சத்து பற்றாக்குறை? 'க்விஸ்' நடத்தி விழிப்புணர்வு
ADDED : ஜூன் 01, 2025 11:06 PM
கோவை : விவசாயிகளுக்கு வாட்ஸ்அப் குழுவில், கேள்வி பதில் வாயிலாக, நோய்கள், சத்து பற்றாக்குறை தொடர்பான விழிப்புணர்வை வேளாண்துறை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், வாட்ஸ்அப் சேனல் துவக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்குத் தேவையான சந்தை நிலவரம், தொழில்நுட்பம், மானிய அறிவிப்புகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் உள்ளிட்ட தகவல்கள் இதன் வாயிலாக பகிரப்படுகின்றன.
தற்போது இக்குழுவில், க்விஸ் நடத்தி, அதன் வாயிலாக விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் தோட்டக்கலைத் துறை ஈடுபட்டுள்ளது.
உதாரணமாக, சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட வாழை இலையின் படத்தைப் பகிர்ந்து, இந்த வாழை இலை எந்த சத்து பற்றாக்குறை அறிகுறியை உணர்த்துகிறது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
விடையாக, பொட்டாசியம், மக்னீசியம், போரான், துத்தநாகம் ஆகிய நான்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு, அதில் ஒன்றைத் தேர்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது பதிலைப் பதிவு செய்யலாம். குறிப்பிட்ட அவகாசத்துக்குப் பிறகு, விடையும் பகிரப்படுகிறது.
இதுபோன்று தொடர்ந்து பல்வேறு நோய்கள், சத்து பற்றாக்குறை உட்பட வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து கேள்வி எழுப்பி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தோட்டக்கலைத் துறையின் முயற்சிக்கு, விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.