தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'வெள்ளலுார் குப்பை கிடங்கு பிரச்னை: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்'

'வெள்ளலுார் குப்பை கிடங்கு பிரச்னை: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்'

'வெள்ளலுார் குப்பை கிடங்கு பிரச்னை: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்'


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 04:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 04:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: வெள்ளலுாரில் நிலத்தடி நீர் மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை எழுந்துள்ளது.

சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் கோவை(சி.வி.சி.) தலைவர் ஜெயராமன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய(கோவை) சுற்றுச்சூழல் பொறியாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், 'கோவைக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வெள்ளலுார் குப்பை கிடங்கு விஷயத்தில் விதிமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, 2023ல் உறுதியளித்திருந்தார்.

ஆனால், அங்கு எழும் துர்நாற்றம் விமான நிலையம் வரை செல்கிறது; நகரின் வளர்ச்சியை பாதிக்கிறது. குறிச்சி, வெள்ளலுார் பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்துள்ளது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட வேண்டும்.

தனியார் பஸ்களில் 'ஏர் ஹாரன்' பயன்பாடு அதிகரித்துள்ளது. விதிமீறும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு கழிவு மேலாண்மை செய்ய, நவீன உபரணங்கள் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us