/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் பட்டம்' வினாடி - வினா போட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவர்கள் யார், யார்?
/
'தினமலர் பட்டம்' வினாடி - வினா போட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவர்கள் யார், யார்?
'தினமலர் பட்டம்' வினாடி - வினா போட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவர்கள் யார், யார்?
'தினமலர் பட்டம்' வினாடி - வினா போட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவர்கள் யார், யார்?
ADDED : டிச 13, 2025 06:36 AM

கோவை: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், மணி மேல்நிலைப்பள்ளி, ராசகொண்டலார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாகினி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, சேது வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலிருந்து பங்கேற்ற மாணவர்கள், அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
மணி மேல்நிலைப்பள்ளி பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றில் பங்கேற்ற, 106 மாணவர்களில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதிச்சுற்றில் பங்கேற்றனர்.
இதில், 'இ' அணியின் ஜீவன், சாய் ஸ்ரீராம் ஆகியோர் அரையிறுதிக்கு, தகுதி பெற்றனர். பள்ளி செயலாளர் சத்தியநாராயணன், முதல்வர் சுகிர்தா இறுதிப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
ராசகொண்டலார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றில் பங்கேற்ற 89 மாணவர்களில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதிச்சுற்றில் பங்கேற்றனர். இதில், 'எச்' அணியின் கைலேஸ்வரன், கிரிஷ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். தாளாளர் சத்தியநாராயணன், முதல்வர் மதுபிரபா இறுதிப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நாகினி வித்யாலயா மெட்ரிக் பள்ளி கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள இப்பள்ளியில், நடந்த தகுதி சுற்றில் பங்கேற்ற 72 மாணவர்களில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதிச்சுற்றில் பங்கேற்றனர். இதில், 'ஏ' அணியின் மேகா, ஹர்ஷிதா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். முதல்வர் நந்தினி இறுதிப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
சேது வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குரும்பம்பாளையத்தில் உள்ள இப்பள்ளியில், நடந்த தகுதி சுற்றில் பங்கேற்ற 50 மாணவர்களில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதிச்சுற்றில் பங்கேற்றனர்.
இதில், 'டி' அணியின் கிரிஷ், ராஜ்லட்சுமி ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். தாளாளர் ராமநாதன், முதல்வர் ஜெயலட்சுமி, போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
'தினமலர்' சார்பில் நடத்தப்படும் வினாடி-வினா போட்டிகளில், சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிறுவனங்கள், கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன.

