/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சத்துணவு பயனாளிகளின் விவரம் பதிவேற்ற உத்தரவு
/
சத்துணவு பயனாளிகளின் விவரம் பதிவேற்ற உத்தரவு
ADDED : டிச 13, 2025 06:35 AM
கோவை: 2025 - 2026ம் கல்வியாண்டில், சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025---26 கல்வியாண்டில் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அதன்படி, பள்ளிக் கல்வித்துறையின் 'டிஎன்எஸ்இடி' செயலி மற்றும் எமிஸ் இணையதளத்தில், சத்துணவு மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு ஏதுவாக புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும், தங்கள் பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்பில் பயிலும் சத்துணவு பயனாளிகளின் விவரங்களை சரிபார்த்து, வரும் 25ம் தேதிக்குள், பதிவேற்றம் செய்ய வேண்டும்; இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

