/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆரம்பத்தில் கிடைத்தது 'ஜில் மோர்' திடீரென இப்போது நிறுத்தியது யார்?
/
ஆரம்பத்தில் கிடைத்தது 'ஜில் மோர்' திடீரென இப்போது நிறுத்தியது யார்?
ஆரம்பத்தில் கிடைத்தது 'ஜில் மோர்' திடீரென இப்போது நிறுத்தியது யார்?
ஆரம்பத்தில் கிடைத்தது 'ஜில் மோர்' திடீரென இப்போது நிறுத்தியது யார்?
ADDED : ஏப் 14, 2025 05:47 AM

கோவை : வெப்பத்தை தணிக்க, கோவை மாநகராட்சி சார்பில், நகரின் முக்கிய இடங்களில் அண்மையில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தல்கள், முறையாக செயல்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் வெயில் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், வெப்பம் காரணமாக இப்போதே பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
வெப்பத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு மாநகராட்சி சார்பில், நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டன. காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை, வெயிலில் அலைந்து திரிந்த பொதுமக்களுக்கு, இந்த பந்தல்கள் பெரும் ஆசுவாசமாக இருந்தன. இப்போது இந்த பந்தல்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சுகிறது.
மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, மேட்டுப்பாளையம் சாலை- பூமார்க்கெட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தல், பகல் 12:00 மணிக்கு முன் மூடப்படுகிறது. மோர் மார்க்கெட் பகுதியில், சில நாட்களுக்கு முன் வரை ஜில்லென்று மோர் வழங்கி வந்த நீர்மோர் பந்தல், இப்போது காலியாக கிடக்கிறது.
வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட, சில பகுதிகளில் பந்தல் இருப்பினும், அதில் மோர் வழங்கப்படுவதில்லை என்று, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த பந்தல்கள், கோடைக் காலம் முழுவதும் தொடர்ச்சியாக, முறையாக செயல்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.