/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது யார்? விசாரணை முடிவுக்கு காத்திருக்கும் ராமதாஸ்
/
ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது யார்? விசாரணை முடிவுக்கு காத்திருக்கும் ராமதாஸ்
ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது யார்? விசாரணை முடிவுக்கு காத்திருக்கும் ராமதாஸ்
ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது யார்? விசாரணை முடிவுக்கு காத்திருக்கும் ராமதாஸ்
ADDED : ஜூலை 24, 2025 01:26 PM
சென்னை: பா.ம.க.,வில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ள அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், ஒட்டுக்கேட்பு கருவி விசாரணை முடிவுக்காக காத்திருப்பதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த டிசம்பர் 28ம் தேதி, புதுச்சேரியில் நடந்த பா.ம.க., பொதுக்குழுவில் கட்சி நிறுவனர் ராமதாஸ் -- தலைவர் அன்புமணி இடையே வெடித்த மோதல், ஏழு மாதங்களாக நீடிக்கிறது. புதிய நிர்வாகிகளை நியமிப்பது, நீக்குவது என, இருவரும் தனித்தனியாக செயல்படுகின்றனர்.
இந்நிலையில், திண்டிவனம், தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில், ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டு உள்ளதாக, ராமதாஸ் கூறிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, காவல் துறையில் புகார் அளித்த அவர், தனியார் துப்பறியும் நிறுவனம் வாயிலாகவும் விசாரணை நடத்தினார்.
ஒட்டுக்கேட்பு கருவி குறித்து, காவல் துறை உரிய முறையில் விசாரிக்கவில்லை என ராமதாஸ் குற்றஞ்சாட்டிய நிலையில், அந்த கருவி நேற்று, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் வரும் ஆக. 10ல், கட்சியின் மகளிர் மாநாடு நடத்த, ராமதாஸ் ஏற்பாடு செய்துள்ளார். அதற்கு முன், ஒட்டுக்கேட்பு கருவியை யார் வைத்தது என தெரிந்து விட்டால், அதற்கேற்ப சில முக்கிய முடிவுகளை எடுக்க, அவர் திட்டமிட்டு உள்ளதாகவும் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பூம்புகார் மகளிர் மாநாட்டிற்கு முன், உட்கட்சி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும் என்பதிலும், அவர் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது, கடும் கோபத்தை ஏற்படுத்தியதால், அதை வைத்தவர்களுக்கு எதிராக, அவரது நடவடிக்கை கடுமையாக இருக்கும் எனவும் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.