/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரவோடு இரவாக கோழி கழிவு கொட்டி செல்வது யார்? போடிபாளையம் கிராமத்தில் சுகாதார சீர்கேடு
/
இரவோடு இரவாக கோழி கழிவு கொட்டி செல்வது யார்? போடிபாளையம் கிராமத்தில் சுகாதார சீர்கேடு
இரவோடு இரவாக கோழி கழிவு கொட்டி செல்வது யார்? போடிபாளையம் கிராமத்தில் சுகாதார சீர்கேடு
இரவோடு இரவாக கோழி கழிவு கொட்டி செல்வது யார்? போடிபாளையம் கிராமத்தில் சுகாதார சீர்கேடு
ADDED : நவ 17, 2025 01:50 AM

சுகாதார சீர்கேடு மதுக்கரை, போடிபாளையம் கிராமம், எல் அண்ட் டி பைபாஸ் அருகில் உள்ள கிளையாற்றில் கோழி கழிவு, அருகிலுள்ள கடைகளின் கழிவை இரவு நேரங்களில் வாகனங்களில் வந்து கொட்டிச் செல்கின்றனர். இதனால், கடும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- மணிகண்டன்: பள்ளத்தை சரிசெய்யணும் கோவைப்புதுார், 90வது வார்டு, சாந்தி ஆசிரம் அருகில், சிவன் நகர் மற்றும் மீனாட்சி நகர் சந்திக்கும் நான்கு சாலை சந்திப்பில், சாலை நடுவே பெரிய பள்ளம் உள்ளது. குடிநீர் குழாய் சரிசெய்ய தோண்டிய குழியை சரியாக மூடாததால், பெரிய பள்ளமாக உள்ளது.
- பிரபாகரன்: தார் சாலைக்காக காத்திருப்பு மேட்டுப்பாளையம், தோலம்பாளையம் பேரூராட்சி, கோப்பனாரி கிராமத்தில் சரியான சாலை வசதியில்லை. கடந்த 40 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் சாலை வசதி அமைக்கவில்லை. அடிப்படை போக்குவரத்து வசதியின்றி கிராம மக்கள் தவிக்கின்றனர்.
- பிரணவ்: சகதியான ரோடு சொக்கம்புதுார், மின்மயானம் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மண் ரோட்டில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. குழிகளில் தண்ணீர் தேங்கி அபாயகரமானதாக உள்ளது.
- பாலமுருன்: தொண்டாமுத்துார்.: சாலையை காணோம் உப்பிலிபாளையம், 60வது வார்டு, பிருந்தாவன் நகர், செம்மொழிப் பூங்கா மேற்கு புறம் உள்ள சாலையில் சமீபத்தில் சாலைப்பணி நடந்தது. இதில், 50 அடி துாரம் மட்டும் சாலைப் பணி நடைபெறவில்லை.
- கனகராஜ்: உப்பிலிபாளையம்.: வெட்டப்பட்ட பூங்கா மரம் ராமநாதபுரம், காவேரிநகர் விரிவாக்கம், ஆர்.ஆர்.ஆல் சீசன்ஸ் அபார்ட்மென்ட் அருகே, பூங்காவில் இருந்த மரத்தை சில தனிநபர்கள் வெட்டினர். எந்த அனுமதியும் பெறாமல் மரங்கள் வெட்டப்படுகின்றன. இதேபோல், ஒ.எஸ்.ஆர்., இடத்தில் நடைபெறும் கட்டுமானங்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்.
- ரெஜினா: குப்பைமேடான பஸ் ஸ்டாண்டு மருதமலை பேருந்து நிலையத்தின் நிலைமை நாளுக்கு, நாள் மோசமாகி வருகிறது. பேருந்து வளாகம் முழுவதும் பெருமளவு குப்பை குவிந்துள்ளது. பயணிகள் நிற்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.
- சுந்தரராஜ்: காலையில் மாயமாகும் மரங்கள் சாய்பாபாகாலனி, 45வது வார்டு, பாரதி பார்க் ரோட்டில், சாலையோர மரங்கள் இரவில் அடிக்கடி வெட்டப்படுகின்றன. யார் வெட்டுகிறார்கள், எதற்காக வெட்டுகிறார்கள் என்பது குறித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
- லெனின்: கடிக்கும் நாயை பிடிக்கவும் பீளமேடு, 27வது வார்டு, பெரிய மாரியம்மன் கோயில் அருகே, சாலையில் சுற்றித்திரியும் நாய் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துகிறது. சமீபத்தில் இரண்டு பேரை இந்த நாய் கடித்துள்ளது. புகார் தெரிவித்தும் நாயை பிடிக்க நடவடிக்கையில்லை.
- முருகேசன்: பீளமேடு.: தெருவிளக்கு பழுது மாநகராட்சி, 50வது வார்டு, ராஜேஸ்வரி நகர், இந்துஸ்தான் பள்ளி அருகே, ' எஸ்.பி - 41, பி 13' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த சில நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இரவில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால், விரைந்து தெருவிளக்கு பழுதை சரிசெய்ய வேண்டும்.
- தேவதாஸ்:

