ஓட்டுகள் எண்ணப் போவது யார்: இணைய வழி குலுக்கலில் தேர்வு
ஓட்டுகள் எண்ணப் போவது யார்: இணைய வழி குலுக்கலில் தேர்வு
ADDED : ஏப் 27, 2026 09:13 PM
கோவை: மாவட்டத்தில் நடந்த தேர்தலில் பயன்படுத்திய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஜி.சி.டி. கல்லுாரியில் உள்ள 'ஸ்ட்ராங் ரூம்'களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஓட்டு எண்ணுவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் பிரிவினர் ஈடுபட்டு உள்ளனர். கவுண்டம்பாளையத்துக்கு 20 மேஜை, பிற 9 தொகுதிகளுக்கு தலா 14 மேஜை போடப்படும்.
தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு தனி மேஜை அமைக்கப்பட்டு, பிரத்யேக குழு நியமிக்கப்படும். ஓட்டு எண்ணிக்கை பணியில் 1,000 பேர் வரை ஈடுபட வாய்ப்புள்ளது.
மைக்ரோ அப்சர்வர்கள், ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், ஓட்டு எண்ணிக்கை உதவியாளர்களாக யார் பணிபுரிவது என்பது குறித்து இணைய வழியிலான குலுக்கல் நேற்றிரவு நடந்தது.
ஓட்டு எண்ணும் நாளான மே 4ம் தேதி காலை, ஓட்டு எண்ணுவதற்கு சற்று நேரத்துக்கு முன், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களில் யார் எந்தெந்த தொகுதியில் பணிபுரிய வேண்டும் என்கிற குலுக்கல், இணைய வழியில் மீண்டும் நடத்தப்படும்.
அப்போது தான், அவர்கள் பணிபுரியும் தொகுதி மற்றும் மேஜை விபரம் தெரிய வரும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
