/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதும், பட்டாசு வெடிப்பதும் ஏன்? ஒவ்வொன்றுக்கும் காரணம் உண்டு!
/
இன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதும், பட்டாசு வெடிப்பதும் ஏன்? ஒவ்வொன்றுக்கும் காரணம் உண்டு!
இன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதும், பட்டாசு வெடிப்பதும் ஏன்? ஒவ்வொன்றுக்கும் காரணம் உண்டு!
இன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதும், பட்டாசு வெடிப்பதும் ஏன்? ஒவ்வொன்றுக்கும் காரணம் உண்டு!
ADDED : அக் 19, 2025 09:30 PM
இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியே தீபாவளி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தீமை, அறியாமை விலகி, நன்மை, அறிவு பெருகும் நாளை, தீபாவளி குறிக்கிறது. வருடம் முழுவதும் பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும், தீபாவளி அளவிலா சந்தோஷத்தை அள்ளி தருகிறது.
மதங்களை கடந்து இந்தியாவின் திருவிழாவாக, தீபாவளி கொண்டாப்படுகிறது. எண்ணெய் குளியல், புத்தாடை, பலகாரம் என தீபாவளியின் சம்பிரதாயத்திற்கு, அர்த்தமான காரணங்கள் உண்டு.
மகிழ்ச்சி, ஐஸ்வரியம் பெருகும் இன்று அனைவரும் அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதில் முக்கியமானது, கங்கா ஸ்நானம். எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்றும் பெயர். தீபாவளி நாளில் அனைத்து நீர்நிலைகளிலும் கங்கையும், எண்ணெயில் லட்சுமி தேவியும் வாசம் செய்வார்கள் என நம்பப்படுகிறது. எண்ணெய்க் குளியல் செய்பவர்களுக்கு கங்கையில் குளித்த புனிதப்பயன் கிட்டும் என்பார்கள்.
குறிப்பாக, வெந்நீரில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால், பீடைகள் விலகி, புண்ணியம் உண்டாகும். லட்சுமியின் ஐஸ்வரியம் பெருகும் என்பதற்காகவே, பெரியோர்கள் எண்ணெய் குளியல் செய்யச்சொல்கிறார்கள். குளித்த பிறகு புத்தாடை அணிந்து, வீட்டு பெரியோர்களை வணங்க வேண்டும். வீட்டில் செய்த பல வகையான பலகாரங்களை, இறைவனுக்கும் படைத்து பூஜிக்க வேண்டும்.
பின்னர், பட்டாசு வெடிக்க வேண்டும். குறிப்பாக மத்தாப்பு. புரட்டாசி மாதத்தில், பூமிக்கு வந்த நம் முன்னோர்கள், மீண்டும் பித்ரு லோகத்துக்கு திரும்பும்போது, மத்தாப்புகள் வெளிச்சம் காட்டும் என சொல்லுவார்கள்.
தீய எண்ணங்களை அழிப்போம் புதிய டிரஸ், இனிப்பு, பட்டாசு என சந்தோசமாய் சிறகடிக்க, குழந்தைகளுக்கு நிறைய காரணங்களை தீபாவளி தருகிறது.
அருகிலுள்ள கோவிலுக்கு, குடும்பத்தினருடன் சென்று வணங்கலாம். உங்கள் அன்புக்குரியவர்களுடன், என்றும் மறக்க முடியாத தீபாவளியை கொண்டாடி, அற்புதமான நினைவுகளை சேமிப்போம்.
நரகாசுரனை கிருஷ்ணர் அழித்ததை போல, நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தீய எண்ணம் என்ற அசுரனை அழிப்போம்.
தீபாவளியின் தெய்வீக ஒளி எல்லா இருளையும் விரட்டி, நம் வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும்.