/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடைகளில் சர்வர் மக்கர் பொருள் வினியோகம் முடக்கம்
/
ரேஷன் கடைகளில் சர்வர் மக்கர் பொருள் வினியோகம் முடக்கம்
ரேஷன் கடைகளில் சர்வர் மக்கர் பொருள் வினியோகம் முடக்கம்
ரேஷன் கடைகளில் சர்வர் மக்கர் பொருள் வினியோகம் முடக்கம்
ADDED : அக் 19, 2025 09:31 PM
கோவை: சர்வர் இயங்காததால், ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாமல் பணிகள் முடங்கி உள்ளன.
கோவை மாவட்டத்தில், 1,448 ரேஷன் கடைகள் உள்ளன. கடந்த ஒரு வாரமாக, ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்னையால், பி.ஓ.எஸ்., கருவி செயல்படவில்லை.
இதனால் கடை ஊழியர்களால் பொருட்கள் வழங்க முடியவில்லை. கார்டுதாரர்கள் நீண்ட நேரம் கடைகளில் காத்திருந்து, பொருட்கள் வாங்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.
ரேஷன்கடை ஊழியர்கள் கூறுகையில், 'கார்டை ஸ்கேன் செய்து, கைரேகை பதிவு செய்த பிறகுதான் பொருட்கள் கொடுக்க வேண்டும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வர் பிரச்னை தினமும் உள்ளது. இதனால், கார்டுதாரர்களும், கடை ஊழியர்களும்தான் சிரமப்படுகிறோம்,'' என்றனர்.
வழங்கல் அதிகாரிகள் கூறுகையில், 'வழங்கல் துறை சர்வரில், 'அப்டேட்' செய்யும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒருவாரத்தில் பணிகள் முடிந்து விடும். பிறகு பிரச்னை இருக்காது. இப்போது ரெஜிஸ்டரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, பொருட்கள் வழங்கப்படுகின்றன' என்றனர்.