/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஏனுங்க... பொங்கல் தொகுப்பு வாங்கிட்டு போங்க' ; கார்டுதாரர்களுக்கு மொபைல் போனில் அழைப்பு
/
'ஏனுங்க... பொங்கல் தொகுப்பு வாங்கிட்டு போங்க' ; கார்டுதாரர்களுக்கு மொபைல் போனில் அழைப்பு
'ஏனுங்க... பொங்கல் தொகுப்பு வாங்கிட்டு போங்க' ; கார்டுதாரர்களுக்கு மொபைல் போனில் அழைப்பு
'ஏனுங்க... பொங்கல் தொகுப்பு வாங்கிட்டு போங்க' ; கார்டுதாரர்களுக்கு மொபைல் போனில் அழைப்பு
ADDED : ஜன 12, 2025 11:11 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், அனைத்து கார்டுதாரர்களுக்கும், பொங்கல் தொகுப்பு நுாறு சதவீத அளவில் வினியோகம் செய்ய வேண்டும், என ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில்ல அரிசி கார்டு வைத்துள்ள கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு என, பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், பொள்ளாச்சியில், 145 ரேஷன் கடைகளில் 93,100 கார்டுதாரர்கள், ஆனைமலையில், 101 ரேஷன் கடைகளில், 62,042 கார்டுதாரர்கள், வால்பாறையில், 43 ரேஷன் கடைகளில், 15,600 கார்டுதாரர்கள், கிணத்துக்கடவு பகுதியில், 58 ரேஷன் கடைகளில் 33,900 கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாக டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை 'மிஸ்சிங்' என்பதால் ரேஷன் கடைகளில், பொங்கல் தொகுப்பு வாங்க, மக்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
வழக்கமாக, பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடங்கினாலே, ரேஷன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் பொருள் வழங்குவதில் ஏற்படும் குளறுபடிகள் இந்த முறை கிடையாது.
இதனால், அவரவர் பகுதிக்கு உட்பட்ட அனைத்து கார்டுதாரர்களுக்கும், பொங்கல் தொகுப்பு நுாறு சதவீத அளவில் வினியோகம் செய்ய வேண்டும், என ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரேஷன் கடைக்காரர்கள் கூறியதாவது:
கடந்த, 9ம் தேதி முதல், பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது, ஆனால், பெரும்பாலான கார்டுதாரர்கள், பொங்கல் தொகுப்பு வாங்காமல் உள்ளனர்.
அந்தந்த ரேஷன் கடைகளில், ஒவ்வொரு நாள் வினியோகிக்கும் பொங்கல் தொகுப்பின் சதவீதத்தைக் கண்டறியப்படுகிறது.
அதற்கேற்ப முன்கூட்டியே காலை, 8:00 மணிக்கு ரேஷன் கடை திறக்கவும், இரவு, 8:00 மணி வரை பொங்கல் தொகுப்பு வினியோகத்தை தொடரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, ரேஷன் கடைக்கு வராத கார்டுதாரர்களின் மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டும், வரைழைக்கப்படுகின்றனர்.
அனைத்து ரேஷன் கடைகளிலும், பொங்கல் தொகுப்பு வினியோகத்தை நுாறு சதவீதம் பூர்த்தி செய்ய இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.