/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கை வள பணிகள் குறைந்தது ஏன்? ஊரக வளர்ச்சி இயக்குனரகம் குட்டு
/
இயற்கை வள பணிகள் குறைந்தது ஏன்? ஊரக வளர்ச்சி இயக்குனரகம் குட்டு
இயற்கை வள பணிகள் குறைந்தது ஏன்? ஊரக வளர்ச்சி இயக்குனரகம் குட்டு
இயற்கை வள பணிகள் குறைந்தது ஏன்? ஊரக வளர்ச்சி இயக்குனரகம் குட்டு
ADDED : ஜன 20, 2025 11:23 PM
சூலுார்; சூலுார் வட்டாரத்தில் இயற்கை வள மேம்பாட்டு பணிகள் குறைந்துள்ளதற்கு ஊரக வளர்ச்சி இயக்குனரகம் குட்டு வைத்துள்ளது.
சூலுார் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 2024-25 ஆண்டுக்கான இயற்கை வள மேம்பாட்டு பணிகள் நடந்தன. ஆனால், அப்பணிகள் குறைவாக தேர்வு செய்யப்பட்டு, குறைந்த செலவினத்தில், மேற்கொள்ளப்பட்டதால், மாநில அளவில், கோவை மாவட்டம் பின்னுக்கு தள்ளப்பட்டு கடைசி மாவட்டமானது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை இயக்குனரகம், மாவட்ட, ஒன்றிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து குட்டு வைத்தது.  இதையடுத்து, மாவட்ட, ஒன்றிய அதிகாரிகள் அரண்டு போய், புதிய பணிகளை தேர்வு செய்து, அதற்கான முன் மொழிவுகளை அனுப்ப தீவிரம் காட்டி வருகின்றனர். 2 கோடியே, 98 லட்சம் ரூபாய்க்கு, புதிய குட்டை, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு, தடுப்பணைகள், உறைகிணறுகள், அரசு கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளுக்கான முன் மொழிவுகளை, வரும், 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க ஒன்றிய அதிகாரிகள்,  உதவி பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

