/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணாதுரை பஸ் ஸ்டாப் பகுதியை அடைத்து வைத்திருப்பது ஏனுங்கோ?
/
அண்ணாதுரை பஸ் ஸ்டாப் பகுதியை அடைத்து வைத்திருப்பது ஏனுங்கோ?
அண்ணாதுரை பஸ் ஸ்டாப் பகுதியை அடைத்து வைத்திருப்பது ஏனுங்கோ?
அண்ணாதுரை பஸ் ஸ்டாப் பகுதியை அடைத்து வைத்திருப்பது ஏனுங்கோ?
ADDED : ஜூன் 07, 2025 01:28 AM

கோவை; கோவை - அவிநாசி ரோட்டில், அண்ணாதுரை பஸ் ஸ்டாப் பகுதியை போக்குவரத்து போலீசார் அடைத்து வைத்திருப்பதால், பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் ஒசூர் ரோட்டில் சென்று திரும்பி வர வேண்டியிருக்கிறது.
கோவை - அவிநாசி ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. அண்ணாதுரை பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து, ரங்கம்மாள் பள்ளி வரையிலான வழித்தடத்தை போலீசார் அடைத்து வைத்திருக்கின்றனர்.
காந்திபுரம் மற்றும் நஞ்சப்பா ரோடு, வ.உ.சி., பூங்காவுக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள், ஒசூர் ரோட்டில் திரும்பிச் சென்று, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு எதிரே உள்ள ரோட்டில் திரும்பி, மீண்டும் அவிநாசி ரோட்டை வந்தடைந்து, காந்திபுரம் நோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. பஸ்கள் போன்ற பெரிய வாகனங்கள், இப்பகுதியில் உள்ள திருப்பத்தில் திரும்புவதற்கு திணறுகின்றன.
அண்ணாதுரை பஸ் ஸ்டாப் பகுதியில், மேம்பால வேலைகள் முடிந்து விட்டதால், அப்பகுதியில் உள்ள மையத்தடுப்புகளை அகற்றி, காந்திபுரம் செல்ல வேண்டிய பஸ்கள் மற்றும் இதர வாகனங்களை நேராக அனுப்பினால், எல்.ஐ.சி., சந்திப்பு பகுதியில் வலதுபுறம் திரும்பிச் செல்லலாம்.
தேவையின்றி, ஒசூர் ரோட்டில் சென்று திரும்ப வேண்டிய அவசியம் ஏற்படாது. நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழுவினர், இப்பகுதியை ஆய்வு செய்து, இவ்வழித்தடத்தில் வாகனங்களை அனுமதிக்க, போக்குவரத்து போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.