/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழித்தடம் மறிப்பு ஏன்? வருவாய்த்துறை விசாரணை
/
வழித்தடம் மறிப்பு ஏன்? வருவாய்த்துறை விசாரணை
ADDED : ஆக 14, 2025 09:04 PM
கோவை; தெலுங்குபாளையம் கிராமத்தில் வசிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த குறு விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்துக்கு செல்லும் பாதையை, வேளாண் பல்கலை ஊழியர்கள் மறித்த விவகாரம் குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை, தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர்கள் ரங்கராஜன் மற்றும் தேவிமகாசக்தி ஆகிய இருவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சொந்தமாக தெலுங்குபாளையம் கிராமத்தில் தலா இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், விவசாயம் செய்கின்றனர்.
இவ்விருவருக்கும் சொந்தமான விவசாய நிலத்துக்கு, வேளாண் பல்கலைக்கு சொந்தமான நிலத்தருகே உள்ள பாசன வாய்க்காலை கடந்தே செல்ல வேண்டும். வேளாண் பல்கலையில் பணிபுரியும் பிரபுகுமார், பாலு உள்ளிட்ட மேற்பார்வையாளர் ஒருவர் ஆகிய மூவரும் சேர்ந்து, விவசாயிகள் செல்லும் வழித்தடத்தை மறித்து, பொக்லைன் வாகனத்தால் குழிதோண்டி மறைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகள், செல்வபுரம் போலீசிலும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் செய்தனர். வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.