/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உருக்குலைந்த ரோட்டில் கோடு எதுக்கு? பொதுமக்கள் அதிருப்தி
/
உருக்குலைந்த ரோட்டில் கோடு எதுக்கு? பொதுமக்கள் அதிருப்தி
உருக்குலைந்த ரோட்டில் கோடு எதுக்கு? பொதுமக்கள் அதிருப்தி
உருக்குலைந்த ரோட்டில் கோடு எதுக்கு? பொதுமக்கள் அதிருப்தி
ADDED : ஏப் 14, 2025 09:59 PM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், விபத்துகள் அதிகளவு நடைபெறும் பகுதிகளில், மஞ்சள் பட்டை, மெதுவாக செல்லவும் என வாசகங்கள் எழுதிய அதிகாரிகள், ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்காதாதல், வாகன ஓட்டுநர்கள் அதிருப்தியடைந்தனர்.
கேரளா மாநிலம், கோவைக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக பொள்ளாச்சி நகரம் அமைந்துள்ளது. தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது.
பொள்ளாச்சி நகரம் மட்டுமின்றி, கிராமப்புற சாலைகளிலும் விபத்துகள் அதிகளவு நடக்கின்றன. இதை கட்டுப்படுத்த அரசுத்துறை அதிகாரிகள்அடங்கிய குழு ஆய்வு செய்து, விபத்துகள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து மஞ்சள் பட்டை கோடுகள், மெதுவாக செல்ல வேண்டும் என்பதை குறிக்கும் வகையில், 'ஸ்லோ' என எழுதப்பட்டன.
அதில், பொள்ளாச்சி - உடுமலை ரோட்டிலும் விபத்துகள் அதிகளவு நடைபெறும் பகுதி கண்டறியப்பட்டு, விழிப்புணர்வு வாசகங்களுடன், மஞ்சள் பட்டை அமைக்கப்பட்டது.ஆனால் அந்த ரோடு மோசமாக உள்ளதை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் வாகன ஓட்டுநர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி - உடுமலை ரோடு மிகவும் உருக்குலைந்துள்ளதால், விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், பயன்படுத்தப்படாத வாகனங்களை நிறுத்துமிடமாக சர்வீஸ் ரோடு மாறியுள்ளது. இதனால், இந்த ரோட்டில் விபத்துகள் நடக்காத நாளில்லை.
இந்நிலையில், விபத்துகளை தவிர்க்க மஞ்சள் பட்டை கோடுகள், 'ஸ்லோ' என்றும் எழுதப்பட்டுள்ளன. ஆனால், அங்கு ரோடுகள் பெயர்ந்து விபத்துகளுக்கு அச்சாரம் போடுவது போன்று உள்ளது. அதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது ரோட்டை சீரமைக்காமல் மஞ்சள் பட்டை கோடுகள் போடப்பட்டதால், அடுத்தடுத்து வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன. இந்த பட்டை கோடுகளால், வாகனங்கள் பழுதாவதும் தொடர்கிறது.
விபத்தை தடுக்க முயற்சிக்கும் அதிகாரிகள், முறையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
இவ்வாறு, கூறினர்.