/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடு சீரமைப்பதில் தாமதம் ஏன்? என்.எச்., அதிகாரிகள் அலட்சியம்
/
ரோடு சீரமைப்பதில் தாமதம் ஏன்? என்.எச்., அதிகாரிகள் அலட்சியம்
ரோடு சீரமைப்பதில் தாமதம் ஏன்? என்.எச்., அதிகாரிகள் அலட்சியம்
ரோடு சீரமைப்பதில் தாமதம் ஏன்? என்.எச்., அதிகாரிகள் அலட்சியம்
ADDED : செப் 19, 2024 10:08 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், குழாய் சீரமைப்பு பணிகளுக்கான தோண்டப்பட்ட குழி மூடாமல் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
கோவையிலுள்ள, குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கு, கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு வழியாக, ஆழியாறு கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி, கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், சார்-பதிவாளர் அலுவலகம் எதிரே குடிநீர் குழாய் சேதமடைந்து அதிக அளவு நீர், ரோட்டில் வழிந்தோடியது. இதில், அண்ணாநகர் வரை குடிநீர் வழிந்தோடியதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்பட்டனர்.
இதை தொடர்ந்து, குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பணியாளர்கள் நேரில் ஆய்வு செய்து, ரோட்டில் குழி தோண்டி, குழாய் சீரமைப்பு பணி மேற்கொண்டனர்.
பணிகள் நிறைவடைந்தவுடன், வாகன விபத்துகள் ஏற்படாத வகையில், தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குழாய் சீரமைப்புக்கு தோண்டப்பட்ட குழியை மூடாமல் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் இந்த இடத்தை கடக்கும் போது சிரமப்படுகின்றனர்.
மேலும், இரவு நேரத்தில் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அவ்வப்போது எரிவதில்லை. இதனால், இரவு நேரத்தில் இவ்வழியில் நடந்து செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ஒரு மாத காலமாக ரோட்டை சீரமைக்காமல் இருப்பதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. மக்கள் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் விரைவில் ரோட்டை சீரமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தினர்.