sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஏன் தேசம் பிரிக்கப்பட்டது? மதம் குறித்தல்ல; மனிதநேயம் சார்ந்த கேள்வி!

/

ஏன் தேசம் பிரிக்கப்பட்டது? மதம் குறித்தல்ல; மனிதநேயம் சார்ந்த கேள்வி!

ஏன் தேசம் பிரிக்கப்பட்டது? மதம் குறித்தல்ல; மனிதநேயம் சார்ந்த கேள்வி!

ஏன் தேசம் பிரிக்கப்பட்டது? மதம் குறித்தல்ல; மனிதநேயம் சார்ந்த கேள்வி!


ADDED : ஆக 18, 2024 03:19 PM

Google News

ADDED : ஆக 18, 2024 03:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்குரு: தேசப் பிரிவினை கொடுமைகள் தினத்தை முன்னிட்டு சத்குரு அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் 70 லட்சம் மக்கள் கட்டாய இடம் பெயர்தலுக்கு உள்ளாக்கபட்டு, 10 லட்சம் மக்கள் இறந்து போனது குறித்து ஏன் இந்த தேசம் பிரிக்கப்பட்டது என்ற மனிதநேயம் அடிப்படையிலான கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்.

நம் நாட்டில் 1947 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேசப் பிரிவினையால் ஏற்பட்ட மிக மோசமான விளைவுகள் குறித்து எழுத்தாளர் விக்ரம் சம்பத் அவர்களுடன் சத்குரு அவர்கள் இந்த வீடியோவில் உரையாடி உள்ளார்.

இந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, '10-லட்சத்திற்கும் மேலானவர்கள் இறந்து போனார்கள், 60 முதல் 70 லட்சம் மக்கள் கட்டாயமாக அந்த பக்கத்திலிருந்து இந்தப் பக்கமும், இந்தப் பக்கத்திலிருந்து அந்த பக்கமும் தள்ளப்பட்டார்கள்.

சில விஷயங்கள் அப்போது ஏன் அப்படி செய்யப்பட்டது, எதனால் இந்தப் பிரிவினை, இது மதம் குறித்த கேள்வி அல்ல, மனித நேயம் குறித்த கேள்வி. இப்போது கூட அந்தக் கேள்விகளைக் கேட்டு பதில் தேடுகின்ற துணிச்சல் நம் நாட்டிற்கு இல்லை. நான் வருகின்ற தலைமுறை அந்தக் கேள்விகளை கேட்க வேண்டும் என நினைக்கிறேன்.

60 லட்சம் மக்கள் அவர்களிடம் இருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவசர அவசரமாக சென்று வேறு ஒரு நாட்டில் அகதிகளாக இருக்கிறார்கள். இன்றும் அகதி முகாம்களில் இருக்கிறார்கள். சில பேர் 75 வருடங்களுக்குப் பிறகும் அகதிகளாக இருக்கின்றனர். 10 லட்சம் மக்களை வெட்டிக் கொன்றார்கள்.

உங்கள் மனித நேயத்தை தூங்க வைத்து விட்டால் நீங்கள் எதையும் மறந்து விட முடியும். ஆனால் உங்கள் மனித நேயம் உயிரோடு இருந்தால் இந்தக் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். இதற்கு பதில் கிடைக்க வேண்டும். இது நம் தலைமுறைக்கும், குறிப்பாக எதிர்காலத் தலைமுறைக்கும் தேவை.' இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us