/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைத்தது எதனால்? அரசுக்கு ஆசிரியர்கள் கேள்வி

ADDED : ஆக 17, 2025 11:25 PM
கோவை; கோவையில், பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, இதுவரை மதிப்பூதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஜூலை 4 முதல் 10 வரை நடைபெற்ற, பத்தாம் வகுப்பு துணைத்தேர்வில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்காக, மாநில அளவில் மூன்று மையங்கள் அமைக்கப்பட்டன.
கோவை விமல்ஜோதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நான்கு நாட்கள் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றன. 700-800 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
30 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. ஒரு விடைத்தாளுக்கு ரூ.8 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பணிகள் ஜூலை மாதத்திலேயே நிறைவடைந்தன. ஆனால் இங்கு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, இதுவரை மதிப்பூதியம் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர்கள் கூறுகையில், 'இதற்கு முன், விடைத்தாள் திருத்தும் பணிக்கான ஊதியம் உடனடியாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது வாட்ஸ் ஆப் குழு அமைத்து, அதில் வங்கி விவரங்களை பதிவேற்ற அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து நடைமுறைகளை பின்பற்றிய பிறகும் கூட, ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை' என்றனர்.
இதுதொடர்பாக கேட்க, மாவட்ட கல்வி அதிகாரியை தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.