/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பரவலாக பெய்யும் மழை; விவசாய பணிகள் தீவிரம்
/
பரவலாக பெய்யும் மழை; விவசாய பணிகள் தீவிரம்
ADDED : அக் 10, 2024 11:55 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு சுற்றுப்பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததால், நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து, விவசாயம் செழிப்படைந்தது. அதன்பின், கடந்த இரு மாதங்களாக மழை பொழிவு இல்லை.
தற்போது, வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கியுள்ளது. இதனால், ஐப்பசி மாத பட்டத்தில், மானாவாரி பயிராக சோளம், தட்டை, உளுந்து பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். விதைப்புக்கு முன், நிலத்துக்கு உரமிட்டு, உழவு செய்யும் பணியை துவங்கியுள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்த மானாவாரி பயிர்கள் அறுவடை செய்யப்படுகிறது. தற்போது பெய்யும் மழையை பயன்படுத்தி, ஐப்பசி பட்டத்தில் பயிர் சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளோம். மழை, பனிப்பொழிவு கைகொடுக்கும் என்பதால், சாகுபடி பணிகள் துவங்கப்பட்டுள்ளது,' என்றனர்.