ADDED : ஏப் 16, 2026 11:20 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் நேற்று மாலை முதல் கோடை மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் தணிந்து காணப்பட்டது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் கடந்த இரு வாரங்களாக கடும் வெயில் நிலவுகிறது. இதனால், பகல் நேரத்தில் வெளியில் எங்கும் செல்ல முடியாத மக்கள், இரவு நேரத்தில் உஷ்ணம் அதிகரிப்பு காரணமாக அவதிப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று மாலை வானிலை மாற்றம் அடைந்து, கரு மேக மூட்டமாக காட்சியளித்தது. அதன்பின், லேசான இடி, மின்னலுடன் மழை பெய்ய துவங்கியது. பரவலாக பெய் மழையால், வெயிலின் தாக்கம் தணிந்து, சீதோஷ்ண நிலை மாறியது.
இன்னும் மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என, வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், இதேபோன்று மழை பெய்தால் பாதிப்பு இருக்காது என, மக்கள் தெரிவித்தனர்.
