ADDED : செப் 26, 2026 03:47 AM
தொண்டாமுத்துார்: பூலுவபட்டி அருகே, ஆறுச்சாமி, 42, என்பவரை கொலை செய்து நாடகமாடிய அவரது மனைவி ரேவதி, 36, கைது செய்யப்பட்டார்.
கோவை, மெட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி; கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரேவதி.
செப்., 1ம் தேதி இரவு ஆறுச்சாமி மதுபோதையில், வீட்டில் விழுந்தபோது 'டைல்ஸ்' குத்தி உயிரிழந்ததாக, ஆலாந்துறை போலீசில் ரேவதி புகார் அளித்தார்.
சந்தேக மரண வழக்கு பதிந்து, போலீசார் விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில், 'கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதே, ஆறுச்சாமி உயிரிழப்பிற்கு காரணம்' என, தெரிந்தது.
ரேவதியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மதுபோதையில், தொடர்ந்து தன்னிடம் சண்டையிட்டு துன்புறுத்தியதால், ஆத்திரத்தில் கத்தியால் ஆறுச்சாமியின் மார்பு பகுதியில் குத்தி, கொலை செய்ததும், அதை மறைக்க மதுபோதையில் தவறி விழுந்து, உயிரிழந்ததாக கூறி ரேவதி நாடகமாடியதும் தெரிந்தது.
அதன்பின், கொலை வழக்காக மாற்றிய போலீசார், ரேவதியை கைது செய்தனர்.
