/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை
/
கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை
ADDED : ஜூலை 31, 2025 09:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்; நெகமம், வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் சரஸ்வதி, 65. இவரது கணவர் நடராஜ் ஒரு ஆண்டுக்கு முன் இறந்தார். அப்போதிலிருந்து மன உளைச்சலில் இருந்தார். மக்கள் சித்ராதேவி, லதா இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
ஜமீன் கோட்டாம்பட்டியில் உள்ள மகள் சித்ராதேவியின் வீட்டில் சரஸ்வதி வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன் வெள்ளாளபாளையத்தில் உறவினர் வீட்டில் துக்க நிகழச்சிக்கு மகளுடன் சென்றார்.
அப்போது, வெள்ளாளபாளையத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமையில் இருந்தார். மன உளைச்சல் தாங்காமல் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.