/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் குடியிருப்பில் ஏட்டு மனைவி தற்கொலை
/
போலீஸ் குடியிருப்பில் ஏட்டு மனைவி தற்கொலை
ADDED : அக் 30, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்: சூலுார் போலீஸ் ஸ்டேஷனில், ஈரோடு மாவட்டம் அத்தாணியை சேர்ந்த சிவப்பிரகாசம், 40, தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி சுகன்யா, 30. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சூலுார் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். சிவப்பிரகாசம் சமீபத்தில் எஸ்.ஐ., தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்று, எஸ்.ஐ.,யாக தேர்வாகி உள்ளார்.
நேற்று முன் தினம் இரவு, கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, வாக்கு வாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் விரக்தி அடைந்த சுகன்யா, வீட்டில் உள்ள அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சூலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.