/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனத்துறை வலையில் சிக்கிய காட்டுப்பன்றி
/
வனத்துறை வலையில் சிக்கிய காட்டுப்பன்றி
ADDED : ஜூலை 11, 2025 11:58 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கோதவாடி குளம் அருகே காட்டுப்பன்றியை வனத்துறையினர் பிடித்தனர்.
கிணத்துக்கடவு சுற்று வட்டார கிராமப்புறங்களில் காட்டு பன்றிகள் தொல்லை அதிகம் உள்ளது. பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால், கிழங்கு வகைகளை பயிர் செய்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.
தொடர்ந்து, வாழையையும் சேதப்படுத்தி வந்ததால், காட்டுப்பன்றிகளை சுட்டு பிடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதை தொடர்ந்து, வனத்துறை மற்றும் விவசாயிகள் சிறப்பு கூட்டம் கோதவாடியில் சமீபத்தில் நடந்தது. தற்போது, கோதவாடி குளம் அருகே வனத்துறையினர் வலை வைத்து, 60 கிலோ எடையுள்ள ஒரு காட்டு பன்றியை நீண்ட நேரம் போராடி பிடித்தனர். மேலும், இப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என, விவசாயிகளிடம் வனத்துறையினர் உறுதியளித்தனர்.