/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொட்டியில் விழுந்த காட்டுப்பன்றி மீட்பு
/
தொட்டியில் விழுந்த காட்டுப்பன்றி மீட்பு
ADDED : ஆக 11, 2025 08:49 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கோதவாடி மால கோவில் அருகே, காட்டுப்பன்றிகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள தனியார் தோப்பில், தண்ணீர் தொட்டியில் காட்டுப்பன்றி விழுந்திருந்தது. இதைக் கண்ட பணியாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி வனச்சரக அலுவலக வனவர் முருகன் மற்றும் குழுவினர் காட்டுப்பன்றியை பாதுகாப்பாக மீட்டு, வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'இப்பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிகளவில் சுற்றுகின்றன. தற்போது வனத்துறை முயற்சியால் இரண்டு காட்டுப்பன்றிகள் சிக்கியுள்ளது. மேலும், இப்பகுதியில் விளைநிலங்களில் பயிர் சேதத்தை தடுக்க மீதமுள்ள காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

