/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணற்றில் விழுந்த காட்டு பன்றி உயிருடன் மீட்பு
/
கிணற்றில் விழுந்த காட்டு பன்றி உயிருடன் மீட்பு
ADDED : நவ 24, 2024 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே சாந்திமேடு பகுதியில் வீரபாண்டி பேரூராட்சிக்கு சொந்தமான திறந்தவெளி கிணறு உள்ளது. இங்கு காட்டுப்பன்றி தவறி விழுந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் மற்றும் சுரேஷ்குமார் பணியாளர்கள், 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தத்தளித்த காட்டு பன்றியை, உயிருடன் மீட்டு பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.