/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப்பன்றிகளால் தீவன பயிர்களுக்கு தட்டுப்பாடு; பணம் கொடுத்து வாங்கப்படும் வைக்கோல்
/
காட்டுப்பன்றிகளால் தீவன பயிர்களுக்கு தட்டுப்பாடு; பணம் கொடுத்து வாங்கப்படும் வைக்கோல்
காட்டுப்பன்றிகளால் தீவன பயிர்களுக்கு தட்டுப்பாடு; பணம் கொடுத்து வாங்கப்படும் வைக்கோல்
காட்டுப்பன்றிகளால் தீவன பயிர்களுக்கு தட்டுப்பாடு; பணம் கொடுத்து வாங்கப்படும் வைக்கோல்
ADDED : செப் 17, 2025 09:26 PM
மேட்டுப்பாளையம்; வன பயிர்களில், காட்டுப்பன்றிகள் புகுந்து செல்வதால், பசு மாடுகள் தீவன பயிர்களை சாப்பிடுவதில்லை.
இதனால் கால்நடைகளுக்கு வைக்கோல் தீவனம் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது, என, உழவர் மன்ற விவசாயிகள் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் விவசாயத்தையும், விவசாய கூலி வேலையை மட்டுமே நம்பியுள்ளனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக, விவசாயிகள் கறவை மாடுகளை வளர்த்து வருகின்றனர். மாடுகளின் பாலை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியாருக்கு பால் ஊற்றுவதன் வாயிலாக, விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கிறது.
மாடுகளுக்கு தேவையான தீவனப் பயிர்களான மசால் புல், சோளத்தட்டு, மக்காச்சோளம் ஆகியவற்றை விவசாயிகள், தங்கள் நிலங்களில் வளர்த்து வருகின்றனர். ஆனால் காட்டுப்பன்றிகள் தொல்லையால், தீவனப் பயிர்கள் சேதம் அடைகின்றன. இதனால் விவசாயிகள், கறவை மாடுகளுக்கு விலை கொடுத்து தீவனம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காரமடை அருகே முத்துக்கல்லூரில் உள்ள குறிஞ்சி உழவர் மன்ற விவசாயிகள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளன. இந்த பன்றிகள் தீவனப் பயிர்கள் வளர்ந்துள்ள நிலங்களில் புகுந்து, அதை சாப்பிட்டு சேதம் செய்து வருகின்றன.
காட்டுப்பன்றிகள் புகுந்த நிலத்தில் உள்ள தீவனப் பயிர்களை, பசு மாடுகள் சாப்பிடுவதில்லை. காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், விவசாய நிலங்களில் சோளம், மக்காச்சோளத்தை பயிர் செய்ய முடிவதில்லை. அதனால் கறவை மாடுகளுக்கு திருச்சி, தஞ்சை, பழனி ஆகிய பகுதிகளில் இருந்து, வைக்கோல் ஒரு கட்டு, 280 ரூபாய்க்கு, தீவனம் விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.
பசுந் தீவனப் பயிர்களை மாடுகள் சாப்பிட்டால், பால் அதிகம் இருக்கும். வைக்கோல் சாப்பிட்டால், பால் குறைகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசும், வனத்துறையும், காட்டுப்பன்றிகள், விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க வேண்டும். காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.