தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காட்டுப்பன்றிகளால் கறவை மாடுகள் பாதிப்பு

 காட்டுப்பன்றிகளால் கறவை மாடுகள் பாதிப்பு

 காட்டுப்பன்றிகளால் கறவை மாடுகள் பாதிப்பு


ADDED : டிச 17, 2025 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2025 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: -: விவசாய நிலங்களிலும், தீவன பயிர்களிலும், காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தால், பசு மாடுகள் தீவன பயிர்களை சாப்பிடுவதில்லை.

இதனால் தீவனம் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது, என விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள் கூறிய தாவது:

விவசாயத்திற்கு அடுத்தபடியாக விவசாயிகள், கறவை மாடுகளை வளர்த்து வருகின்றனர். அதன் வாயிலாக கிடைக்கும் வருவாய், குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்கின்றன.

கறவை மாடுகளுக்கு தேவையான பசுந்தீவனப் பயிர்களான மசால் புல், சோளத்தட்டு, மக்காச்சோளம் ஆகியவற்றை நிலங்களிலேயே பயிர் செய்கிறோம். காட்டுப்பன்றிகள் தீவனப் பயிர்களை சாப்பிட்டு சேதம் செய்து வருகின்றன.

காட்டுப்பன்றிகள் புகுந்த நிலத்தில் உள்ள தீவனப் பயிர்களில், கெட்ட வாசம் அடிப்பதால் மாடுகள் சாப்பிடுவதில்லை.

அதனால் கறவை மாடுகளுக்கு திருச்சி, தஞ்சை, பழனி ஆகிய பகுதிகளில் இருந்து, வைக்கோல் தீவனம் விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

பசுந்தீவனப் பயிர்களை பசுமாடுகள் சாப்பிட்டால், பால் அதிகம் இருக்கும். வைக்கோல் சாப்பிட்டால், பால் குறைகிறது. இதனால் நஷ்டம் ஏற்படுகிறது.

இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us