ADDED : மார் 06, 2026 05:15 AM

அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: மதுக்கரை வனச்சரகத்தின் கீழ், தீத்திபாளையம், குப்பனூர், கரடிமடை உள்ளிட்ட விவசாய கிராமங்கள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து தினமும் காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள் வெளியேறி, விளைநிலங்களை சேதப்படுத்துகின்றன.
காட்டுப்பன்றிகளே அதிக சேதம் ஏற்படுத்துகின்றன. அவற்றை சுட்டுக்கொல்ல வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தினர். இந்நிலையில், மதுக்கரை வனச்சரகர் அருண்குமார் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் இரவு ரோந்து மேற்கொண்டனர். தீத்திபாளையத்தில் விளைநிலத்துக்குள் புகுந்த, ஐந்து காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொன்றனர். இந்நடவடிக்கை தொடர வேண்டும் என, விவசாயிகள் கோரியுள்ளனர்.
