ADDED : டிச 09, 2024 08:21 AM
வால்பாறை : தேயிலை தோட்டத்தில் காட்டுமாடுகள் அடிக்கடி முகாமிடுவதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.
வால்பாறை அடுத்துள்ள புதுத்தோட்டம் வனப்பகுதியை ஒட்டி, நுாற்றுக்கும் மேற்பட்ட காட்டுமாடுகள் உள்ளன.
இவை, பகல் நேரத்தில் பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டை கடந்து, அருகில் உள்ள அப்பர்பாரளை தேயிலை காட்டில் நாள் முழுவதும் முகாமிடுகிறது.
இப்பகுதி தொழிலாளர்கள் கூறுகையில், 'காட்டுமாடுகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் தேயிலை தோட்டத்தில் முகாமிடுகின்றன. இதனால் குறிப்பிட்ட தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
'எந்த நேரத்திலும் நெடுஞ்சாலைத்துறை ரோட்டை அவை கடப்பதால், வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதை தடுக்க வனத்துறை சார்பில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.